குறை சொல்லி தீட்டாதீர்!
ஆகஸ்ட் 14,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்து உங்களிடம் உதவி கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள். அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.
* ஒருவர் நேர்வழி பெற்றபின், வீண் தர்க்கம் செய்வதை விட்டு விட்டால் அவர் ஒருபோதும் வழிகெட மாட்டார். ஏனெனில், இறைவனிடம் மிகவும் கோபத்திற்குரியவர்கள், வீண்தர்க்கம் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள்.
* யாராவது உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே. காரணம் அந்தப் பாவம் அவனையே சாரும்.
* ஓரிடத்தில் மூவர் இருப்பின், ஒருவரை விட்டு இருவர் மட்டும் ரகசியம் பேசாதீர். ஏனென்றால் அது அவருக்கு மனவருத்தத்தை உண்டுபண்ணும்.
* எவன் புகழுக்காகவும், பகட்டுக்காகவும் ஆடை அணிகிறானோ அவனுக்கு கியாமநாளில் இழிவான ஆடையை அல்லாஹ் அணிவிக்கிறார்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement