வெற்றிக்காக போராடு!
ஆகஸ்ட் 14,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* வலிமை மிக்க சுறுசுறுப்பான நூறு இளைஞர்கள் இருந்தால் போதும். இந்த உலகம் புரட்சிகரமான மாறுதலைப் பெற்று விடும்.
* அறியாமையுடன் கூடிய உயிரற்ற வாழ்க்கையை விட மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைக் காட்டிலும் போர்க்களத்தில் மடிவது சிறந்தது.
* யாரும் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. முன்னோக்கி விரைந்து செல்லுங்கள். ஆற்றல், அஞ்சாமை, பொறுமை,மனஉறுதி ஆகியவையே தேவை. இவை இருந்தால் மகத்தான காரியங்களை நம்மால் சாதிக்க முடியும்.
* பகை, கோபம் ஆகியவற்றை யார் மீதும் திணிக்காதீர்கள். அது வட்டியும், முதலுமாக உங்களிடமே திரும்பி வந்து சேர்ந்து விடும். இதை எந்தச் சக்தியாலும் நிறுத்த முடியாது.
* சுயநலம் இல்லாத மனிதன் மரணத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை. உண்மை, நேர்மை, மனத்தூய்மை கொண்டவனின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement