எதிலும் நேர்மை வேண்டும்
ஆகஸ்ட் 19,2012,
15:08  IST
எழுத்தின் அளவு:

* பிறரது குறைகளைப் பற்றி விவாதிப்பவன் பொழுதை வீணாகக் கழிக்கிறான். அவரவர் குறைகளை அவர்களே தெரிந்து கொள்வர்.
* வேர்வை சிந்தும்படி நாள்தோறும் உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பின்னரே உணவு உண்ண வேண்டும்.
* மனிதன் தன்னைத்தானே செம்மைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே மகிழ்ச்சிக்குரிய வழி. தன்னைத் திருத்திக் கொள்வதில் தளர்ச்சியே கூடாது. கர்வம் கொண்ட மனிதன் அறநெறியில் இருந்து விலகி விடுவான்.
* எதிலும் எப்போதும் நேர்மை இருக்க வேண்டும். பிறரை வஞ்சிப்பதும் கூடாது. பிறர் வஞ்சிக்க இடமளிப்பதும் ஆகாது. எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப்பேறு தான் மகத்துவம் கொண்டது.
* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் தான், உடம்பில் சக்தி உண்டாகும். மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement