Advertisement
மவுனம் சமூகத்துக்கே நல்லது
ஏப்ரல் 15,2009,
18:59  IST

* மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத் தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு இரண்டு செயல்கள் இருக்கின்றன. அதனால், நாக்கு இரண்டு செயல்பாடுகளைக் கொண்டதால் முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
* வாயில் வந்ததையும், கண்டதையும் பேசுவது கூடவே கூடாது. பிறரைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசாமல் பகவத்விஷயத்தையும், நல்ல சத்விஷயங்களை மட்டுமே பேசுதல் வேண்டும்.
* மனதைக் கட்டுப்படுத்த வாயைக் கட்டுவது மிக முக்கியமானது. சாப்பாட்டிலும் கட்டவேண்டும். பேச்சிலும் கட்ட வேண்டும்.
* மவுனத்தை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கே மிகவும் நன்மை தருவதாகும். எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தரும் நல்ல உபாயம் மவுனமே என்றால் மிகையில்லை.
* வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி என்னும் போதே, பேச்சு, சாப்பாடு இரண்டையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று தெரிகிறது. ஆனால், நாமோ நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு விதங்களிலும் நாக்குக்கு வேலை அதிகமாகக் கொடுக்கிறோம். எனவே நாக்கைக் கட்டுப்படுத்துங்கள்.

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement