கடவுள் நிச்சயம் வருவார்
ஆகஸ்ட் 26,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* ஆணவத்தை அறவே விடுங்கள். நம்மிடம் இருப்பது அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும் போது, மனம் வேறு சிந்தனையில் மூழ்குவதில்லை. அந்தப் பணியே கடவுளுக்குரியதாக இருந்து விட்டால் இன்னும் அதன் மதிப்பு கூடி விடும்.
* எண்ணம், வாக்கு, செயல் மூன்றாலும் ஒன்றுபட்டு நில்லுங்கள். வாழ்வில் அமைதியைப் பெறுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
* சுகம் வந்தால் கடவுளை மறந்து விடுகிறோம். துக்கம் வந்தால் தேடி ஓடுகிறோம். இன்பம் துன்பம் எது வந்தாலும் அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்.
* துன்பம் வந்த சமயத்தில் கடவுள் உதவிக்கு வரவில்லையே என்ற கவலை தேவையில்லை. சரியான நேரத்தில் நிச்சயம் வந்து விடுவார்.
* வறுமையுற்ற காலத்தில் சேமித்த பணம் உதவுவது போல, துன்பமடைந்த காலத்தில் நற்செயல்களால் சேமித்த புண்ணியம் நம்மைக் காக்கும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement