விடியலைக் காண்போம்
ஏப்ரல் 18,2009,
09:11  IST
எழுத்தின் அளவு:

* உங்களை ஆறுதல் அடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. உறக்கத்திலிருந்து எழுந்து விடியலில் வெளிச்சத்தைக் காண்பது தான் முக்கியம்.


* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு< என்று அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபாட்டு உணர்வோடு அணுகினால் உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.


* நீங்கள் இயல்பான சுபாவத்துடன் நடைபோட முடியாது. ஏனெனில், இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் அதிகமாக இருக்கிறது. அதனால், பல மூடத்தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.


* உணவு என்பது உடல் தொடர்பான விஷயம். எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ அதையே நீங்கள் உண்ண வேண்டும். ஆனால், உங்கள் உணவை மனம் முடிவு செய்யும்படி விட்டுவிட்டீர்கள். உடலுக்குத் தகுந்த உணவையே தேர்ந்தெடுங்கள்.


* உங்களால் இயலாத ஒன்றைச் செய்ய முடியவில்லை எனில், அதனால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று. அதனால், இயன்ற செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

Advertisement
சத்குரு ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement