E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அவனன்றி அணுவும் அசையாது
ஆகஸ்ட் 30,2012,
14:08  IST
எழுத்தின் அளவு:

* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. அஞ்சுபவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன். துன்பம் வரும்போது எவனொருவன் நடுங்காமல் துணிவுடன் எதிர்த்துப் போராடுகிறானோ அவனே ஞானி.
* வாயால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாருக்கும் சுலபம் தான். ஆனால், சொன்ன வாக்கின்படி நடப்பது மிகவும் கடினமான செயல்.
* கொடுஞ்சொற்களும், கோபமான செயல்களும் இல்லாதவர்களாக விளங்குங்கள்.
* நன்மையை நன்றாக உணர்ந்தும் தீமையை உதறும் வலிமை இல்லாமல் தத்தளிப்பது கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு சமம்.
* அன்பே இன்பம் தரும். பகைமையைப் போக்கும். எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
* செயல்கள் அனைத்தும் இறைவனாலேயே நடக்கின்றன. ஆனால், ஆணவம் கொண்ட மனிதன் "நான் செய்கிறேன்' என்று எண்ணிக் கொள்கிறான் என்கிறது பகவத்கீதை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
- பாரதியார்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement