உத்தம செயல்களை உடனே செய்
டிசம்பர் 04,2007,
19:11  IST
எழுத்தின் அளவு:

* வழி நடத்தும் ஓர் ஆன்மிக ஒளி இருக்கிறது. துணை செய்யும் ஓர் ஆன்மிக சக்தி இருக்கிறது.

* நினைப்பில் உண்மையும், சொல்லில் உண்மையும் மிகவும் அவசியமாகும்.

* பொய் உனது ஜீவனின் இயல்பன்று, அது புறத்திலிருந்து உன்மேல் வருகிறது என்பதை உணர உணர அதை மறுத்து ஒதுக்குதல் எளிதாகும்.

* இந்தியாவில் ஆன்மிக விழிப்பே, நம் உண்மையான ஆன்மாவை மீண்டும் கண்டு கொள்வதே நாம் உயர் நிலையடைவதற்கு மிகவும் சிறந்த சேவை. இதுவே எனது உறுதியான நம்பிக்கை.

* இறைவா, நீ மனிதனுள்ளே இருப்பதால்தான் அவன் தெய்வீகத்தை நம்புகிறான். அதை அடைய முயல்கிறான். உன்னால்தான், மானிட ஆன்மாக்கள் தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முடிகிறது.

* ஓர் இந்துக் கோயிலானது - அது எந்தத் தெய்வத்திற்காகக் கட்டப்பட்டிருந்தாலும் சரி - ஓர் அகன்ற பேரின்பமான சித்பொருளுக்கு எழுப்பப்பட்ட பீடமே ஆகும்.

* பித்தனே நீ எமனை மறந்தாய். இந்த உடல் நிச்சயம் அன்று. மாவில் உப்பு கலப்பது போல் இது மண்ணுடன் மண்ணாகிவிடும். சில வேளைகளில் ஒருவரின் வாழ்க்கை பூமியின் விதியைத் தாங்குகிறது.

* உயிரையும், உடலையும் சாதகன் காமப்படையெடுப்பினின்று முற்றிலும் காக்க வேண்டும். ஏனெனில், அவன் காம வேகத்தை வெல்லாவிட்டால் உடலில் தெய்வ சேதனமும், தெய்வானந்தமும் நிலை கொள்ள முடியாது.

* இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதைவிட உயர்ந்த பெருமையும் புகழும் வேறில்லை.

* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால்; உடனடியாகச் செய்வதே நல்லது.

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement