சத்தியத்தை மதிப்போம்!
ஏப்ரல் 23,2009,
19:04  IST
எழுத்தின் அளவு:

* உங்களிடம் செருக்கின் சாயல் உள்ள வரையில் உங்களால் இறைவனைக் காண இயலாது. நீங்கள் தொடர்ந்து இறைவனை சிந்தித்துக்கொண்டிருந்தால் மட்டுமே செருக்கு அழியும். அவரே நம்மை இயக்குகிறார். நாம் வெறும் கருவி மட்டுமே. எப்போதும் இறை நாமங்களை ஜபியுங்கள். ஒவ்வொருவரிடமும் இறைத்தன்மையைக் காணுங்கள். அடக்கத்துடன் இருங்கள். செல்வம், அந்தஸ்து, அதிகாரம், கல்வி, இனம் குறித்து செருக்கு கொள்ளாதீர்கள். <உங்களின் செல்வம், திறமை எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராகுங்கள்.
* தர்மோ ரக்ஷதி தர்மம் ரக்ஷித- தர்மத்தைக் காப்பீர்களானால் தர்மம் உங்களைக் காக்கும். தர்மம் என்றால் சொல், செயல் ஆகியவற்றில் நேர்மையாக நடந்து, தத்தம் கடமையைச் செய்வதாகும். குழந்தைகள் பெரியவர்களுக்குக் கடமை செய்வது போல பெரியவர்களும் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்புக்களும் உள்ளன. அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு இடையேயும் பரஸ்பர கடமைகள் இருக்கின்றன. ஒருவர் தான் சத்தியம் செய்து கொடுத்த வார்த்தைகளை மதித்து காப்பாற்ற வேண்டும். அனைத்து எதிரிகளையும் எதிர்த்து காத்திடும் சக்தி சத்தியத்திற்கு மட்டுமே உண்டு.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement