நல்லதை விதைப்போம்
செப்டம்பர் 03,2012,
09:09  IST
எழுத்தின் அளவு:

* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் உண்மையில் உயர்ந்த மனிதர்களாவர்.
* முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும்.
* நாம் செய்யும் குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடம் நன்றியுணர்வு கொண்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும். அவரால் தான் நம்மைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம்.
* உடலுக்கு உணவு முக்கியமாக இருப்பதைப் போல மனிதனுக்கு அன்றாட வழிபாடும், தியானமும் அவசியம்.
* வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.
* உடல் தூய்மை நீரால் உண்டாவது போல, உள்ளத்தூய்மைக்கு உண்மையும், தியானமும் துணை செய்கின்றன.
சிவானந்தர்
(இன்று சிவானந்தர் பிறந்ததினம்)

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement