உடல் உழைத்து தேயட்டும்!
செப்டம்பர் 07,2012,
09:09  IST
எழுத்தின் அளவு:

* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு "எதிர்ப்பது' என்றே பொருள்.
* ஒரு நல்ல லட்சியத்தை ஏற்றுக்கொண்டு, அதை அடைவதற்காக தைரியத்துடன் போராடும் வெற்றி வீரனாகத் திகழுங்கள்.
* நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமை நமக்குள் இருக்கிறது.
* நல்லவழியில் செல்வத்தைத் தேடுவதும், அதை பிறருக்கு உதவும் வகையில் செலவழிப்பதும் மட்டுமே கடவுளுக்குரிய வழிபாடு.
* உடல் உறுப்புகள் துருப்பிடித்துத் தேய்ந்து போவதை விட, உழைத்துத் தேய்வது மேலானது.
* உலகம் ஏளனம் செய்வதை பொருட்படுத்த வேண்டாம். லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருங்கள்.
* மற்றவை எல்லாம் மரணத்தோடு நம்மை விட்டு நீங்கிவிடும். ஆனால், நல்லொழுக்கம் மறுபிறவியிலும் நம்மைத் தொடர்ந்து வரும்.
* செயலின் பயனில் மட்டும் கருத்தைச் செலுத்தாமல் செய்யும் முறையிலும் கவனம் வைப்பது அவசியம்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement