சகல வளமும் தந்தருள்வாய்
செப்டம்பர் 14,2012,
10:09  IST
எழுத்தின் அளவு:

விநாயகர் சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! கருணாமூர்த்தியே! ஒற்றைக்கொம்பனே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உனக்கு என் இனிய நமஸ்காரம்.
* பக்தர்களை ஓடோடி காக்க வருபவனே! உண்மைக்கு துணை நிற்பவனே! யானைமுகனே! பரம் பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.
* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். எங்களுக்கு சகல செல்வத்தையும் தந்தருள்வாயாக.

கிருபானந்த வாரியார்

Advertisement
கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement