பயனுண்டு பக்தியினாலே!
மே 02,2009,
09:39  IST
எழுத்தின் அளவு:

* சக்தி மீது கொண்ட பக்தியினால் பல நன்மைகள் உண்டு. மலையினைப் போன்ற புஜங்களின் மீது சக்தி தன் பொற்பாதங்களை வைத்திருக்கிறாள். அதனால், தினமும் உழைக்கும் சமயத்திலும், பிற பணிகளைச் செய்யும் போது எல்லாம் சக்தி தேவி நம்மோடு இருப்பதாக எண்ண வேண்டும்.
* அலைகள் பொங்கி எழும் கடலின் மீது, சக்தி ஒரு தோணியாக வருவாள். அந்த தோணியில் பயணம் செய்து, பிறவிக்கடலைக் கடந்து விடலாம்.
* முருகப்பெருமானை நினைப் பவர்களுக்கு நல்லறிவைப் பயன்படுத்தி அறவழியில் சேர்த்த செல்வம் சேரும். அவரது வலிமையால் தீமைகள் விலகிச் செல்லும். அவரை நினைப்பவர்களுக்கு எவ்விதக் குறையு மில்லை. மனதில் கவலை கடல் போல தோன்றும் போது, குமரப்பெருமானின் கையிலிருக்கும் வேல் பாதுகாக்கும்.
* எங்கள் இறைவனே! உலகில் எத்தனையோ கோடி இன்பங்களை வைத்துள்ளாய். பிறக்கும் உயிர்களுக்கு முக்தி என்னும் ஒரு பேரின்ப நிலையினை வைத்தாய். அந்நிலையில் இப்பிரபஞ்ச ரகசியங்களை அறியும் உணர்வையும் வைத்தாய். அதற்கு பக்தி என்னும் சாதனத்தையும் தந்து எமக்கு நல்வழி காட்டினாய்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement