பேச்சில் இனிமை வேண்டும்
மே 02,2009,
19:31  IST
எழுத்தின் அளவு:

* உலகில் உள்ள எல்லாமே ஓருயிர். இந்த உண்மை தெரிந்தவன் பிறரையும் தன்னைப் போலவே எவ்வித சந்தேகமும் இல்லாமல் பார்க்கின்றான்.
* செய்யும் செயல்கள் அனைத்தும் சிவமாகிய இறைவனுக்கு அன்றி வேறு யாருக்கும் அல்ல என்று மெய் ஞானிகள் உணர்ந்து சொன்னார்கள். எத்தனை கோடி இடர்கள் நம்மை வந்து சூழ்ந்தாலும் இச்சிந்தனையை மாற்றக்கூடாது.
* மனதில் உறுதி வேண்டும். பேசும் வாக்கில் இனிமை கலந்திருக்க வேண்டும். எல்லாரும் விரும்பும் வகையில் பேச வேண்டும். மனதில் நல்ல நினைவுகள் மட்டுமே வேண்டும். விரும்பும் பொருள்கள் நம் கைவசமாக வேண்டும்.
* செல்வமும் வேண்டும். செல்வத்தை நல்வழியில் தர்மம் செய்ய மனவுறுதியும் வேண்டும். மனதில் நினைவு நல்லதாக இருக்க வேண்டும். காணும் கனவுகள் நனவாக வேண்டும்.
* நம் மனதுக்குள் இருக்கும் கண் (அகக்கண்) திறக்க வேண்டும். செய்யும் செயலில் உறுதியோடு பணியாற்ற வேண்டும். கடவுள் இவ்வுலகைக் காக்க வேண்டும். இந்த பூமி முழுவதும் நன்மை பெற வேண்டும். இந்த மண்ணகமே விண்ணகம் போல மாறி, வானம் இப்பூமியில் தென்பட வேண்டும். எங்கும் உண்மையின் அருளாட்சி நடக்க வேண்டும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement