அறம் செய விரும்பு
மே 06,2009,
15:53  IST
எழுத்தின் அளவு:

* எது நல்லதோ அதுவே தர்மம் ஆகும். தர்மத்தை "அறம்' என்பர். இதை அவ்வையார், "அறம் செய விரும்பு' என்று சொன்னார். தர்மத்திற்கு அடுத்த நிலையில், நமக்குள்ள பக்குவக்குறை வான நிலையால், பணமும் பொருளும் தான் வேண்டு மென்று நினைப்பதால் அதற்கே "அர்த்தம்' என்று பெயர் வந்து விட்டது. நம் ஆச்சார்யர் சங்கரரோ இந்த அர்த்தம் தான் பெரிய அனர்த்தம் என்று, பஜ கோவிந்தத்தில் சொல்லி விட்டார். ஏனென்றால், ரொம்பவும் தற்காலிக மான நிறைவை, அல்ப சந்தோஷத்தை மட்டுமே பணத்தால் நாம் பெற முடியும்.
* பொதுவாக தர்மம் என்பது ஈகை குணத்தையே குறிக்கும். எந்தவிதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு நன்மை செய்தாலும் அதன் பலன் நம்மையே வந்து சேரும்.
* நாம் செய்யும் தர்மத்தை பலன் எதிர்பார்க்காமல் ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்யத் தொடங்கினால், மனமாசு என்னும் அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும். இந்த எண்ணத்தோடு தர்மம் செய்யும் போது, நாம் பிறருக்கு கொடுக்கும் பொருளே நம்மை பரம்பொருளிடம் சேர்க்கும் சாதனமாகி விடுகிறது.

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement