பெற்றோரை நேசியுங்கள்
செப்டம்பர் 20,2012,
17:09  IST
எழுத்தின் அளவு:

* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில்தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.
* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.
* வயது வந்த பெற்றோரில் தாய் தந்தை இருவரில் ஒருவர் இருந்து அவருக்கு பிள்ளைகள் செலவு செய்யவில்லையானால் அவர்கள் சொர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோரை மனம் நோகச் செய்து அவர்கள் அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவமாகும். தண்டனைக்கும் உரியதாகும்.
* பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாய கடமையாகும்.
* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோர்களாகும். அவர்களுக்கு நல்லதை செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement