நல்லதில் மனம் செல்லட்டும்!
மே 06,2009,
19:21  IST
எழுத்தின் அளவு:

*  உடல் நல்ல நிலையில் இருக்க மூன்று வேளையும் உண்பதைப் போல, மனம் சீராக இருக்க, தினமும் மூன்று மணி நேரம் தியானம், ஜபம், வழிபாடு செய்யுங்கள்.
* கள் நிறைந்த பானையை வெளிப்புறத்தில் நெய்ப்பூச்சு செய்துவிட்டால் நெய்மணம் பானையின் உள்ளே உள்ள கள்ளின் துர் வாடையைப் போக்கி விடாது. அதுபோல, உள்மனதில் தீய எண்ணங்களும், சிந்தனைகளும் நிரம்பியிருக்க வெளிஉலகத்தில் நல்லவனாகப் பாசாங்கு செய்வதால் ஒரு பயனுமில்லை. 
* அடுத்தவர் குறைகளைக் காண ஆயிரம் கண்களைப் பயன்படுத்தி எல்லா நேரத்தையும் வீணாகச் செலவிட்டால் நம் மனம் அசுத்தமாகிவிடும். நம் மனம் கேமராவின் லென்ஸ் போன்றது. நாம் கவனம் செலுத்தும் விஷயம் தான் அதில் பதியத் தொடங்கும். நல்ல விஷயங்களில் மட்டும் நம் மனதைச் செலுத்துவோம்.
* "கடவுள் இல்லை' என்று கூறுபவன் தன்னைத்தானே "மலடியின் மகன்' என்று கூறுவது போன்ற கேலிக் குரியது. அவன், தன்னைத்தானே "பேச இயலாத ஊமை' என்றும் சொல்லிக்கொள்கிறான். இதுபோன்ற வாதங்களால் இருப்பதை இல்லை என்று ஆக்க முடியாது.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement