இதுவே சிறந்த காணிக்கை!
செப்டம்பர் 21,2012,
13:09  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் உங்களைச் சுற்றியோ, அருகிலோ, பக்கவாட்டிலோ இருக்கிறார்.
* மனிதன் இரக்ககுணம் கொண்டவனாக இருக்க வேண்டும். ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
* நல்வாழ்வு பெறுவதற்கான உயர்ந்த வழியை ஏற்படுத்தித் தரும் கல்வியே பயனுள்ளது.
* கடவுள் நாம் சொல்வதைக் கேட்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறார்.
* தீமையில் இருந்து விடுபட்ட தூயமனமே, கடவுள் விரும்பும் சிறந்த காணிக்கையாகும்.
* மனைவியின் ஒழுக்கமே, கணவனைக் காப்பாற்றும் ஆயுதம்.
* கடவுள் ஒருவரே. எந்த வடிவத்தை வழிபட்டாலும் அவர் ஒருவரையே நாம் வழிபடுகிறோம்.
* எப்போதும் கடவுள் சிந்தனையில் இருப்பது தான் உண்மையான சாதனை.
* ஒழுக்கத்துடன் வாழ்வது அவசியம். ஒழுக்கம் இல்லாத வாழ்வு அஸ்திவாரம் இல்லாத கட்டிடத்தை போன்றது.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement