வலைப்படுவதால் ஏதும் நடக்காது
மே 17,2009,
18:24  IST
எழுத்தின் அளவு:

* சத்தியம் ஒன்றே. அதை ஆராதனை செய்யும் வழிகள் பல உள்ளன. சத்தியத்தை மட்டுமே பூஜிக்கும் விரதம் மேற்கொள்பவர்கள் இறுதியில் ஆனந்தத்தையும் நிறைவை யும் அடைவர்.
* கொலையையும், கொள்ளையையும் அன்பினாலும், பிறருக்கு இரங்கும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடி வரக்கூடிய மாமருந்து. மற்றவை எல்லாம் போலியே.
* குற்றம் செய்த மனிதனை சீர்திருத்தி இனிமேல் அவன் குற்றம் செய்யாத அளவில் அறிவு நிலையிலும் ஒழுக்க நிலையிலும் மேம்படுத்த வழிவகை செய்யவே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த எண்ணத்துடன் தான் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
* குற்றம் புரிவதற்கு அடிப்படைக் காரணம் அறியா மையே. அந்த அறியாமையை போக்குவதற்கு நல்லவர் களின் சேர்க்கையும், மனோதிடமும் அவசியம்.
* கவலைப்படாமல் தைரியமாக இருந்தால் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. நோயோ, ஆபத்தோ நேர்ந்தாலும் அதற்காக கவலைப்படுவதை தவிர்த்தால் நோயும், கவலையும் விலகத் துவங்கி விடும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement