விரிந்த உள்ளம் வேண்டும்
அக்டோபர் 01,2012,
09:10  IST
எழுத்தின் அளவு:

* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற ஆற்றலும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன.
* என்னால் முடியும் என்று நினைத்து செயலாற்றினால் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.
* மனிதனைப் பிணைத்திருக்கும் பந்தம் என்னும் கட்டுகள் அனைத்தும் கடவுளின் கருணையால் மட்டுமே அவிழும்.
* தூய்மையான நல்லெண்ணம் கொண்டவர்கள் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காணும் பேறு பெறுவர்.
* உலகத்தைப் போல நம் உள்ளமும் பரந்து விரிந்ததாக இருக்கட்டும்.
* மனிதனை உருவாக்குவதில் இன்ப துன்பம் இரண்டும் சமமான இடத்தைப் பெறுகின்றன.
* தன்னைச் சரிபடுத்திக் கொண்டால் உலகையும் சரிப்படுத்தும் தகுதியைப் பெற முடியும்.
* இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசானாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறது.
* மனித உயிர் தெய்வத்தன்மை கொண்டது. ஆனால், ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டு கிடக்கிறது.

- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement