உயிர்களை நேசியுங்கள்
அக்டோபர் 01,2012,
09:10  IST
எழுத்தின் அளவு:

* பொறுமை நல்லவர்களின் அடையாளம். பிறர் இகழ்ந்தாலும் கூட பொறுத்துக் கொள்பவனே நல்ல அறிஞன்.
* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தார் அடக்கமில்லாமல் வாழும் துறவிகளைக் காட்டிலும் மேலானவர்கள்.
* செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.
* எதையும் தீர ஆலோசித்து பேச வேண்டும். மிதமாகப் பேசுபவனையே பெரியோர்கள் மதிப்பர்.
* நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதே அகிம்சை. மனிதன் எல்லா உயிர்களையும் நேசித்து வாழப் பழக வேண்டும்.
* பாவச் செயல்கள் தொடக்கத்தில் இன்பத்தை அளித்தாலும் அதன் முடிவு துன்பமாகவே இருக்கும்.
* எண்ணம், சொல், செயலால் நெறியோடு வாழ்வதே நல்லொழுக்கம்.
* உண்மையாக நடக்கும் மனிதனுக்கு உபதேசம் தேவையில்லை.
* சொல்லக்கூடாத விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பதே மேலானது.
- மகாவீரர்

Advertisement
மகாவீரர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement