செய்யும் தொழிலே தெய்வம்
அக்டோபர் 01,2012,
09:10  IST
எழுத்தின் அளவு:

* எல்லா வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும், மனத்தூய்மை இல்லாவிட்டால் அதனால் பயன் இல்லை.
* ஆரோக்கியமும், மனவலிமையும் பெற்றவர்கள் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய முற்பட வேண்டும்.
* நீதிபோதனைகளை மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், கடைபிடிப்பது கடினம்.
* தேடும் செல்வம் நம்மோடு வரப் போவதில்லை. அதனால், நம்முடைய பணம், பொருள், அதிகாரம், பெருமை அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்போம்.
* செய்யும் தொழிலே தெய்வம். எந்தப் பணியும் உத்தமமானது தான். அதில் விருப்பத்தோடு ஈடுபடும்போது அதன் மதிப்பு கூடுகிறது.
* மனித வாழ்வை மரத்திற்கு ஒப்பிட்டால், நல்ல பண்பாட்டை வளர்க்கும் கல்வி அதன் வேராக அமைந்துள்ளது.
* அன்பு வழியில் கடவுளின் திருவடியில் பக்தி செலுத்துங்கள். குழப்பம் நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement