செலவில் யாருக்கு முதலிடம்?
அக்டோபர் 01,2012,
09:10  IST
எழுத்தின் அளவு:

* பெரும் பாவியைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாகச் செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.
* உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால் உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை.
* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.
* உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன் அளவு முறையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. புத்திக்கூர்மையாக இருப்பதும் புத்திக்குறைவாக இருப்பதும் கூட.
* எவர் தமது குடும்பத்தின் நன்மையை கருதி செலவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் தருமத்தின் நன்மையை அளிக்கின்றான்.
* அடிமை, ஏழைக்கு தானம் அளிப்பதை விட அதிகமான நன்மை மனைவிக்கு செலவு செய்வதில் உண்டு. முதலில் நமது குடும்பத்தினருக்குச் செலவு செய்வது தான் கடமை.
-நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement