உயர்ந்த பிரார்த்தனை எது!
மே 21,2009,
10:48  IST
எழுத்தின் அளவு:

* அன்பை வளர்த்துக்கொள். அன்பைப் பரப்பு. நமக்கும் அன்பே கிடைக்கும். அன்பையே அறுவடை செய்யுங்கள். அன்பை விட உயர்ந்த மதம் ஏதுமில்லை.
* உங்களிடம் அன்பின் ஊற்று இல்லையென்றால், பூஜை வழிபாடு போன்ற கருவிகளால் உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள்.
* காற்றுக்கு மின்விசிறியையும், ஒளிக்கு மின்சார விளக்கினையும் பயன்படுத்து கிறோம். ஆனால், மின்சாரத்தைத் தொட்டால் நம்மை அழித்துவிடும். அதனால், எந்த ஆற்றலாக இருந்தாலும் அதை நன்மைக்கும் பயன் படுத்தலாம். கெடுதிக்கும் பயன்படுத்தலாம் என்பது உறுதியாகிறது. அந்த ஆற்றலை நன்மைக்கு பயன் படுத்தினால் என்ன!
* தீயசெயல்களால் ஒருபோதும் நன்மை உண்டாவ தில்லை. நல்ல செயல்கள் யாருக்கும் சிறிதும் தீமை இழைப்பதில்லை.
* ஏழைகளுக்கு உணவளிப்பதும், பார்வையற்றோர், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காதுகேளா தோர், பேசும் திறனற்றோருக்கு தொண்டாற்றுவதும் உயர்ந்த பிரார்த்தனை.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement