ஆத்மாவிற்கு உரமிடுங்கள்
டிசம்பர் 04,2007,
19:16  IST
எழுத்தின் அளவு:

பாரதப் பண்பாடு அனுபவத்தாலும், வெளியுலகம் அறிவதாலும் மேலும் மேலும் சிறப்படைந்து வருகிறது. அனுபவம் மேலிட மேலிட நம் பண்பாடு பற்றி அதிகம் அறிகிறோம். புதிய எண்ணங்கள் நமக்கு எழுகின்றன.

உன் காலில் தைத்துள்ள முள்ளை இன்னொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும். பாதத்தில் தைத்த முள்ளை எடுக்க கோடாரியைப் பயன்படுத்த முடியாது. வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும். ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மனித இயல்புகளால்தான் முடியும்.

பல மரங்களைப் பார்த்திருக்கலாம். சில பெரிய ஆலமரங்கள் பெரிய மாளிகை போலப் பெரியதாய் காட்சி அளிக்கின்றன. அதன் விதையைப் பார்த்தால் கடுகு போல மிகச் சிறியதாயுள்ளது. அந்த மிகச்சிறிய விதையுள் தான் அந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது என்பதுதான் உண்மை. இதே போலப் பிரபஞ்சமெனும் பெரிய மரத்தில் காண்பன யாவும், தெய்வீகமெனும் சிறிய விதையிலிருந்து தோன்றியதுதான். இவ்வண்ணமே உன் பெரிய உடலில் ஆத்மாவின் அம்சமாக மிகமிகச் சின்னஞ்சிறிய விதையுள்ளது. அதற்கு உரமிட்டு, வளர்த்து செழிக்கவிடு. அப்போதுதான் பிரபஞ்சத்தின் தெய்வ ஸ்வரூபம் தெரியும்.

ஒரு மனிதன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும். தவிர்க்க முடியாத சம்பவங்களை எடுத்துக் கொண்டு பொறாமையை வளர்க்கப் பயன்படுத்துவது தவறு. அது நல்ல மனித இயல்பு அல்ல. அனுபவிக்க வேண்டிய நோய், சூழும் துன்பம், நமக்குள்ள தொந்தரவுகள் யாவும் வெளியிலிருந்து வந்தவையோ, கடவுள் கொடுத்தவையோ அல்ல. அவை யாவும் நம் செயலின் விளைவுகளே.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement