அன்புக்கு விலை ஏது
மே 25,2009,
19:19  IST
எழுத்தின் அளவு:

* உலகத்தின் தாய் தந்தையரே கடவுள். நம் உடலின் தாய் தந்தையே நம் பெற்றோர். உடலையளித்த பெற்றோ ருக்கு நன்றிக் கடன் செலுத்துவது போல, உலகை நமக்களித்த கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டியது அவசியம்.
* அடுத்தவர் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்து அன்பு செய்வது அன்புக்கு விலை வைப்பதுபோலாகும். வெகுமதியை எதிர்பார்த்து அன்பு பாராட்டக்கூடாது. எதிர்பார்ப்பு என்பதே இல்லாமல் காட்டும் அன்பே உயர்ந்ததாகும்.
* கொடிவகைகளைப் பயிர் செய்து அதன் போக்கில் வளரவிட்டால் புதர்மண்டிப் போய்விடும். காடாக ஒழுங்கின்றி வளராமல் சீராக வளர அதன் கிளை களை வெட்டி சீர்செய்து பந்தலில் படரச் செய்ய வேண்டும். அதுபோல், மனதிலும் வேண்டாத எண்ணங்களை வெட்டி முறைப்படுத்தினால் உள்ளம் சீராகிவிடும்.
* வழிபாட்டில் இடம்பெறும் இலை, மலர், கனி,நீர் என்று ஒவ்வொன்றும் உள்ளுறையாக அமைந்தவை. துளசி இலை என்பது நம் உடலையே இறைவனுக்கு கருவி யாக்குவதாகும். மலர் நம் இதய மலரைக் குறிக்கும். கனி என்பது பக்குவப்பட்ட மன நிலையைக் குறிப்பதாகும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement