Advertisement
விடாமுயற்சி வெற்றி தரும்
அக்டோபர் 14,2012,
16:10  IST

* முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.
* ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.
* ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.
* பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் கொள்கை என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.
* தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி. நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அக்னிக்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்.
- பாரதியார்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement