கலைவாணியை வணங்குவோம்!
அக்டோபர் 19,2012,
16:10  IST
எழுத்தின் அளவு:

* சரஸ்வதியின் கையில் உள்ள ஏட்டுச்சுவடியும், ஜெபமாலையும் வித்தை, ஞானத்தின் அடையாளங்கள். வித்தை என்னும் படிப்போடு கடவுளை அறியும் ஞானமும் நமக்கு வேண்டும் என்பது இதன் பொருள்.
* கடவுளை வழிபடாவிட்டால் படித்துப் பயனில்லை என்பதை திருவள்ளுவர், ""கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்'' என்கிறார்.
* மூன்றாம் பிறைக்கு கலைநிலா என்று பெயர். கலை என்றால் வளர்வது. சரஸ்வதி தலையில் மூன்றாம் பிறையைச் சூடியிருக்கிறாள். இதற்கு காரணம் கலைகள் இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்தவே!
* வெண்தாமரை, வெண்ணிற அன்னம், ஸ்படிகமாலை, பிறைநிலா, வெள்ளை ஆடை ஆகியவற்றைக் கொண்ட கலைவாணியை தியானிப்பவர்களின் மனதில் தூய்மையும் அமைதியும் நிலைத்திருக்கும்.
காஞ்சிப்பெரியவர்
(இன்று சரஸ்வதிபூஜை)

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement