வெற்றி தருவாய் அன்னையே!
அக்டோபர் 24,2012,
09:10  IST
எழுத்தின் அளவு:

* வெற்றிவாகை சூடிய ஆதிபராசக்தியே! இளம்சூரியனைப் போல திலகம் சூடியவளே! குங்குமம் போன்ற மேனி வண்ணம் கொண்டவளே! அன்னையே! நீயே எனக்கு உற்ற துணை.
* என் அறிவில் குடியிருக்கும் ஆனந்தவல்லியே! இளவஞ்சிக்கொடியே! மும்மூர்த்திகளும் போற்றும் தேவியே! உன் திருவடித்தாமரைகளில் அடைக்கலம் புகுந்து விட்டேன்.
* பதினான்கு உலகங்களையும் ஆள்பவளே! நஞ்சை உண்ட நீலகண்டனுக்கு மூத்தவளே! ஞானியர் உள்ளத்தில் உறைபவளே! இந்த எளியவனையும் ஆட்கொள்ள வருவாயாக.
* மலையில் வீற்றிருக்கும் மலைமகளே! மங்கலத்தின் இருப்பிடமே! அழகுமயிலே! ஞானக் களஞ்சியமே! பூங்கொடியாய் திகழ்பவளே! என்னை ஆதரித்து அருள்வாயாக.
* அம்பிகையே! மனோன்மணியே! நான்முகியே! நாராயணியே! எல்லாச்செயல்களிலும் எங்களுக்கு வெற்றி அருள்வாய்.
விஜயதசமி பிரார்த்தனை

Advertisement
லஷ்மி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement