தியானத்தை விட சிறந்தது எது
மே 28,2009,
18:44  IST
எழுத்தின் அளவு:

* ஜபத்திலோ, தியானத்திலோ அமர்ந்து இருப்பதைக் காட்டிலும், ஒருவனுடைய துன்பத்தைக் களைவதே மேலானது. பிறர் துன்பத்தைப் போக்கும்போது, நாம் மேலும் ஆன்மிகத்தகுதியை அடைகிறோம். பிறருக்கு உதவுவது என்பது தியானத்தை விடவும் சிறந்ததாகிறது.
* மக்களைக் கடவுள் தன்பால் ஈர்க்கிறார். கடவுள் காந்தமாகவும், மக்கள் இரும்பாகவும் உள்ளனர்.
* கடவுளும் மனிதனும் ஒரே இனம் என்றாலும், மனிதன் இரும்பைப் போல துருப்பிடித்து அழுக்குப் படிவங்களால் மூடப்பட்டு இருக்கிறான். தடைகளை அகற்றுங்கள். உங்கள் உண்மை இயல்பை உணருங்கள்.
* மனிதன் தெய்வீக இயல்பைத் தன்னைச் சுற்றிலும் கமழச் செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதன் உயிர் வாழ்வதில் அர்த்தம் இருக்கிறது. உங்கள் எண்ணம் நல்லனவாகவும், சொற்கள் இனிமையாகவும் இருந்தால் தெய்வீகச்சூழல் உங்களைச் சுற்றி உருவாகும்.
* உண்மையாயிருங்கள். உண்மையை மட்டும் பேசுங்கள். திசை மாற்றாதீர்கள். அனுபவத்தை அதிகப்படுத்தியோ அல்லது பொய்யாக்கியோ பேசாதீர்கள். எது நடந்ததோ அதை இயல்பாகக் கூறுங்கள்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement