குழந்தைகளுக்கு நற்போதனை
அக்டோபர் 24,2012,
09:10  IST
எழுத்தின் அளவு:

* முதலில் மனிதன் தன்னுடைய மிருக உணர்வைப் போக்க முயலவேண்டும். பின் தெய்வமாக உயர வழிதேட வேண்டும்.
* நம் வீட்டுக்குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நல்ல பண்புகளான தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றை கடைபிடிக்க வழிகாட்ட வேண்டும்.
* உண்மையாய் இருப்பவர் கடவுள் மட்டும் தான். அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டு விட்டால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்கும்.
* நம் துன்பம் அனைத்திற்கும் மூலகாரணமான ஆசையை வேரறுத்து விட்டால் மனநிம்மதிக்கு குறைவிருக்காது.
* வாழ்வில் எந்தவித பாவமும் செய்யாதவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
* தாரகம் என்றால் "பாவங்களைப் பொசுக்கி மேலே போவது' என்று பொருள். ராமநாமத்தை "தாரகமந்திரம்' என்று சொல்வர். ராமா என்று ஜெபித்தால் பாவம் அனைத்தும் தீரும்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement