இல்லம் ஒரு கோயில்
அக்டோபர் 30,2012,
10:10  IST
எழுத்தின் அளவு:

* சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் நலிந்தவர்களுக்கு சேவை செய்வதே சாதனை. மனநோயாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள், சிறைக்கைதிகள் போன்றவர்களுக்குத் தொண்டாற்றுங்கள்.
* இரும்பு துருப்பிடித்தால் காந்தத்தால் அதனைக் கவர்ந்திழுக்க முடியாது. அதுபோல கடவுளோடு சேர விடாமல் தடுக்கும் தீய குணங்களை அகற்றினால் ஒழிய அருளைப் பெற முடியாது.
* உங்கள் இல்லம் சிறு கோயிலாக விளங்கட்டும். அங்கே குடும்பத்தோடு அமர்ந்து பக்திப்பாடல்களை பஜனை செய்யுங்கள்.
* தெய்வீக மணம் நம்மைச் சுற்றி பரவிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்குரிய நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொள்ள முயலுங்கள்.
* நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மறுவிளைவு உண்டு. இந்த கோட்பாட்டுக்கு உட்பட்டே நாம் செயலாற்ற வேண்டும்.
* உண்மையான அனுபவத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள். யாரையும் திசைமாற்றும் எண்ணத்தோடு செயல்படாதீர்கள்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement