சமையலும் ஒரு தியானமே
மே 29,2009,
17:53  IST
எழுத்தின் அளவு:

* அன்பு என்னும் விதை விதைத்து மெய்யுணர்வை அறுவடை செய்யுங் கள். அருள் என்னும் நீர் பாய்ச் சுங்கள். விதையில் மரத்தின் தன்மை முழுமையாக இருப்பதைப் போலவே எண்ணத்தில் எல்லாமே அடங்கி இருக்கிறது.
* தியானத்தில் அமர முடியவில்லையே, தெய்வவழிபாடு செய்ய முடியவில்லையே என்று ஏங்காதீர்கள். சமையலும் ஒரு தியானமே. சப்பாத்தி மாவைத் தேய்த்து விரிவாக்குவது போல மனமும் விசாலமாகட்டும்.
* காய்கறிகளை நறுக்கும் போது வேண்டாதவற்றை நறுக்கி கழிப்பது போல, வேண்டாத தீய குணங்களை மனதில் இருந்து அகற்றி விடுங்கள். காய்கறிகளை தண்ணீரில் போடுவதுபோல, அருள் என்னும் நீரில் மனதை போடுங்கள். காய்கறிகளை தீயில் வேகவைப்பது போலவே, மனதை ஞானத்தீயில் வேக விடுங்கள். இப்படி எண்ணும்போது நாம் செய்யும் சமையலும் தெய்வப்பணியாகவே மாறிவிடும்.
* தெய்வம் என்னும் ஆதார சக்திக்கு பணி செய்யும் கருவியாக உங்களை எண்ணிக் கொள்ளுங்கள். கடவுள் எப்போது ஆனந்தமயமாகவே இருக்கிறார். அதுபோல நீங்களும் கடவுளை மனதில் நினைத்துக் கொண்டால் எப்போதும் ஆனந்தமயமாக இருக்க முடியும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement