விரைந்து நன்மை செய்வோம்
நவம்பர் 04,2012,
12:11  IST
எழுத்தின் அளவு:

* எவர் தமக்கு கடன் கொடுத்தவரை திருப்தியோடு அனுப்பி வைக்கின் றாரோ, அவருக்காக தரையில் உள்ள எல்லா பிராணிகளும் பாவமன்னிப்பு கோருகின்றன.
* கடன்பட்ட ஏழைக்கு அவகாசம் அல்லது கடனை நீக்கி விடுபவர்க்கு, மறுமையில் அல்லாஹ் தனது சிம்மாசனத்தின் நிழலில் இடம் தருவான்.
* உங்களில் எவரேனும் யாருக்காவது கடன் கொடுத்துஇருந்தால் கடன் வாங்கியவர் உங்களுக்கு அன்பளிப்பு செய்தால் அல்லது அவருடைய வாகனத்தில் ஏறும் சூழ்நிலை ஏற்பட்டால் அது தவிர்க்கவேண்டிய செயலாகும்.
* அவசரத்தை வெறுத்து ஒதுக்கும் இஸ்லாம், நன்மையான காரியங்களை விரைவாக செயல்படுவதை வரவேற்கின்றது. மறுமையின் காரியங்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிதானம் சிறப்பைத் தரும்.
* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும். அந்த விரோதியை அழிக்க அவன் கடுமையாகப் போராட வேண்டும்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement