அன்பு மயமாக்குவோம்
மே 29,2009,
18:28  IST
எழுத்தின் அளவு:

* வெற்றி எட்டுத் திசைகளிலும் பரவும்படியாக முரசு கொட்டுவோம். வேதம் என்றும் நிலைத்து வாழ்க என்று முரசு கொட்டுவோம். நெற்றிக் கண் கொண்ட ஈசனோடு நடனமிடும் சக்தி தாயின் புகழ் பரவ முரசு கொட்டுவோம்.
* ஊருக்கு நல்லதைச் சொல்ல வேண்டும். உண்மை என தெரிந்ததை மட்டும் உலகுக்கு சொல்ல வேண்டும். சீரும் சிறப்பும் தந்து இவ்வுலகிற்கு முதன்மையாக விளங்கும் தெய்வத்தின் துணை எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்க வேண்டும்.
* வேதம் அறிந்தவர்களும், கல்வியறிவில் சிறந்தவர்களுமே மேலானவர்கள். நீதி தவறாமல் நியமப்படி ஆட்சி செய்பவர்களே நல்ல ஆட்சியாளர்கள்.  பல தொழில் புரிந்து வியாபாரம் செய்பவர்கள் வணிகர்கள். இன்னும் தொண்டு செய்து வாழும் மக்களும் இருக்கின்றனர். குடும்பத்தில் தந்தையும், தாயும், பிள்ளைகளும் போல இந்த நால்வகை மக்களும் ஒரு குலத்தவரே. இதில் உயர்வு தாழ்வு இல்லை.
* ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டி வாழ்வோம். தொழில்கள் பல உலகில் நடைபெற துணை நிற்போம். உலகை அன்பு மயமாக்குவோம். அந்த அன்பு நமக்கு வளம் பல கொண்டு வரும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement