ஆறுதல் தரும் ஆறுமுகன்
நவம்பர் 11,2012,
10:11  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் எல்லா இனங்களையும் படைத்துஇருக்கிறார். ஆனால், மனிதனுக்கு மட்டுமே மனம் என்னும் கருவியைக் கொடுத்திருக்கிறார். மனதால் நன்றி உணர்வோடு கடவுள்மீது பக்தி செலுத்த வேண்டியது கடமை.
* தினமும் மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனால், குடும்பத்தில் ஒற்றுமை, தெய்வகடாட்சம் நிறைந்திருக்கும். குடும்பத்தலைவர் பாடல்களைச் சொல்ல மற்றவர்கள் வழிமொழிய வேண்டும்.
* பசுவின் மடியில் இருந்து பால் சுரப்பது போல, கோயிலில் பக்தி உணர்வு சுரக்கிறது. அதனால் ஆலயவழிபாட்டை வாரம் ஒருமுறையாவது, செய்யவேண்டியது அவசியம்.
* பன்னிருகைகளால் வாரி வழங்கும் வள்ளலாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். வாழ்வு வளம் பெற ஆறுமுகனின் திருவடிகளைப் பணியுங்கள்.
* உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து ஆறுதல் இன்றி அலைகின்றன. அறுபடை வீடுகளைத் தரிசித்தால் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்கும்.
- வாரியார்

Advertisement
கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement