Advertisement
ஆசைகளைக் குறையுங்கள்
நவம்பர் 11,2012,
10:11  IST

* நிச்சயமாக ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இஸ்லாத்தின் குணம் வெட்கப்படுவதாகும்.
* எவர் ஒருவர் இறைவனிடத்தில் (தேவையானதை) கேட்கவில்லையோ அவர்மீது இறைவன் கோபம் அடைகின்றான்.
* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.
* நற்செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
* எவர் தமது குடும்பத்தின் நன்மையைக் கருதி செலவு செய்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் தர்மத்தின் நன்மையை அளிக்கின்றான்.
* அடிமை, ஏழை ஆகியவர்களுக்கு தானம் அளிப்பதை விட அதிகமான நன்மை, மனைவிக்குச் செலவு செய்வதில் உண்டு.
* முதலில் முக்கியமாக நமது குடும்பத்தினருக்கு செலவு செய்வது நம் கடமை. பின்னர் நெருங்கிய உறவினருக்கு செலவு செய்யலாம்.
* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.
- நபிகள் நாயகம்

குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement