வயிறு ஒன்று கைகள் இரண்டு
மே 30,2009,
10:12  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொரு மனிதனின் விதியும் அவன் கையில் தான் உள்ளது. அடுத்தவர்கள் நம்மை விடுவிக்கவேண்டும் என்றோ, நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்றோ எண்ணுதல் கூடாது. நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அங்கிருந்தபடியே உங்கள் சுதந்திரத்திற்காக முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கு இறைவனின் துணையை கைக்கொள்ளுங்கள்.
* கடந்த கால வினைப்பயனால் துன்பங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்ளுங்கள். இறையருளை நாடி பிரார்த்தனையை மேற்கொண்டால் துன்பங்களை முழுமையாக போக்கிக் கொள்ளவோ அல்லது அதன் வேகத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவோ இயலும்.
* நிகழ்காலம் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. இதே நிகழ்காலந்தான் எதிர்வருகின்ற நாளைய வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. அதனால், சரியான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து பலருக்கும் பயனுள்ள மனிதராக வாழுங்கள்.
* யாரும் பட்டினி இருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வயிறைத் தான் கொடுத்திருக்கிறார். ஆனால், உழைப்பதற்கென்று இரண்டு கைகளைத் தந்திருக்கிறார். அதனால், இரண்டு கைகளாலும் உழைக்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் யாவரும் வயிறார உண்டு வாழலாம். உழைப்பு மனிதனின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement