Advertisement
சவாலைச் சந்திப்போம்
நவம்பர் 19,2012,
11:11  IST

* உலகில் "அன்பு செய்யும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. அது தான் அன்பு மதம்.
* உலகில் "இதயத்தின் மொழி' என்ற ஒரே ஒரு மொழி மட்டுமே இருக்கிறது.
* அறிவு எதையும் பிரித்துப் பார்க்கும். ஆனால் அன்பு சேர்த்து வைக்கும்.
* ஒவ்வொரு அனுபவமும் ஏதாவது ஒரு உணர்வின் வழியாக, உடலளவில் விளைவை ஏற்படுத்தும்.
* உன்னைக் கடவுளின் வேலையாள் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே.
* அலைபாயும் மனதால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது.
* ஒரு மனிதனின் நன்னடத்தை, அவனுடைய மனநிலையைச் சார்ந்திருக்கிறது
* வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு கனவு; அதனை நனவாக்குங்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு; அதில் ஈடுபடுங்கள். வாழ்க்கை அன்புமயம்; அதனை அனுபவியுங்கள்.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement