E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உண்மை வெற்றி தரும்
நவம்பர் 19,2012,
11:11  IST
எழுத்தின் அளவு:

* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.
* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.
* எவனுடைய தீங்கான செயலுக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை கொடுக்கின்றார்களோ அவர்களே மக்களில் மகாகெட்டவர்கள்.
* அக்கிரமம் செய்கின்றவன் நிச்சயமாக அவனையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கின்றான். ஆனால், அவனால் இதனை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
* வாங்கும்போதும், விற்கும்போதும் சாந்த குணத்தை கடைபிடிப்பவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.
* முதலாளிக்கும் தொழிலாளிக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் சிண்டு முடித்து சண்டை மூட்டுபவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
* நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.
- நபிகள் நாயகம்

குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement