அன்பு நீர் பாயட்டும்!
மே 31,2009,
11:14  IST
எழுத்தின் அளவு:

* சக்தி எல்லையற்றது. முடிவில்லாதது. தான் அசையாமல், உலகப் பொருள்களை எல்லாம் அசைத்து வைப்பது சக்தியே.
* சக்தி என்பவள் பிரம்மதேவனின் மகளாக, கண்ணபெருமானின் தங்கையாக, சிவபெருமானின் மனைவியாக இருக்கிறாள். அதே சக்தியே பிரம்மா, கண்ணன், சிவன் மூவருக்கும் தாயாகவும் திகழ்கிறாள். சக்தியே எல்லாவற்றுக்கும் ஆதாரமான முதல்பொருளாக இருக்கிறாள்.
* சக்தி என்னும் கடலில் சூரியன் ஒரு நுரை போல இருக்கிறான். சக்தி என்னும் வீணையில் சூரியன் ஒரு ஸ்வர ஸ்தானம். சக்தி ஆடும் கூத்தில் சூரியனின் ஒளி ஒரு தாளமாக இருக்கிறது. அந்த சக்தியை நாம் போற்றுவோம்.
* காகம் கரைவதும், நீர் பாய்வதும், பயிர் வளர்வதும், கோழி கூவுவதும், எறும்பு ஊர்வதும் இப்படி இயற்கையின் ஒவ்வொரு அசைவும் சக்தியின் தொழிலே. அவள் நம்மை கர்மயோகத்தில் (கடமையைச் செய்தல்) நாட்டம் கொள்ளச் செய்வாளாக.
* மகா சக்தியின் அருளால் மனம் என்னும் நிலத்தில் அன்புநீர் பாயட்டும். அறிவு என்னும் ஏறு (காளை) உழட்டும். சாஸ்திரங்களால் அதிலுள்ள களை நீங்கட்டும். வேதப்பயிர் செழிக்கட்டும். இன்பமாகிய நெல்லை அறுவடை செய்ய அவளது அருள் கிடைக்கட்டும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement