பக்தி எப்போதும் இருக்கட்டும்
நவம்பர் 26,2012,
09:11  IST
எழுத்தின் அளவு:

* இதயத்தைக் கவனி. அது சொல்லும் சொல், செயல், சிந்தனை, நடத்தை ஆகியவற்றையும் கவனி.
* ஆசிரியர் சொல்வதைப் பின்பற்று. தீமையை எதிர்கொள். இறுதி வரை போராடு. வாழ்க்கை விளையாட்டை ரசித்து முடி.
* வாழ்க்கை என்பது நேசித்தல், கவனித்தல், வளர்ச்சி பெறுதல், கற்றுக்கொள்ளுதல் இவையனைத்தும் சேர்ந்ததாகும்.
* நீங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள். நீங்கள் எல்லோரும் அன்பு என்னும் மதத்தால் கட்டப்பட்டிருக்கிறீர்கள்.
* பிறரிடம் உள்ள தீயவற்றைத் தேடி அலையாதீர்கள். அம்முயற்சியே உங்களைக் கறைபடியச் செய்து விடும்.
* பக்தி என்பது குறிப்பிட்ட நேரத்தில் அணியும் சீருடை போன்றதல்ல. அது, எப்போதும் உங்களிடம் இருத்தல் வேண்டும்.
* கடவுள் கொடுப்பதை அழிக்கமுடியாது. மனிதன் கொடுப்பதை பாதுகாக்கமுடியாது.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement