நாவடக்கம் மிகவும் அவசியம்
மே 31,2009,
16:46  IST
எழுத்தின் அளவு:

* ஒரு மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் பொதுவாகச் சிந்தித்து நடுநிலையோடு வாழ்வது சிறந்தது. ஒரு நல்ல மனிதனுக்குரிய உயர்ந்த தகுதி நடுநிலையாளராக இருப்பது தான். நல்லவர்கள் செல்வநிலையிலும், ஏழ்மைநிலையிலும் நடுநிலைமையிலிருந்து தவறமாட்டார்கள்.
* அனைத்து செல்வங்கள் இருந்தபோதிலும், ஒழுக்கம் இல்லை என்றால் ஒருவனுக்கு பெருமைஇல்லை. உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது. நல்ல ஒழுக்கம் கொண்டவர்கள் தவறியும் பிறரைப் பழித்துப் பேசமாட்டார்கள்.
* பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்பவர்களைக் காட்டிலும் பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் மேலானவர்கள். ஆசைகளைத் துறந்த துறவிகளை காட்டிலும் பொறுமையுடையவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுவர்.* தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்ள பகைவனோ, வேறு எதுவோ தேவையில்லை. பொறாமை என்ற ஒன்றே போதும். பிறர் செய்யும் தர்மங்களைக் கண்டு பொறாமை கொள்பவர்களின் குடும்பம் சிதைந்து ஏழ்மைநிலையை அடையும்.
* அடக்கமுடைய மனிதன் வாழ்வில் உயர்வடைகிறான். அவன் தேவர்களுக்கு ஒப்பானவன். எதையும் அடக்காவிட்டாலும் மனிதன் தன் நாக்கையாவது அடக்க வேண்டும்.

Advertisement
திருவள்ளுவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement