உண்மையான ராமநவமி
ஜூன் 01,2009,
15:34  IST
எழுத்தின் அளவு:

* ஸ்ரீ ராமநவமி ராமர் பிறந்த தினம். இந்நாளில், எல்லோரும் ராமநாம ஜபம் செய்கிறார்கள். ராமாயணம் படிக்கிறார்கள். ராம, லட்சுமண, சீதா, ஆஞ்சநேயருக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால், இவர்கள் பின்பற்றிய கொள்கைகளின் மேன்மையை உணராத வரையில், அவர்களுக்கு செய்யப்படும் பூஜை நமக்கு பலன் தராது. அவர்களைப் போலவே நமது மனமும், எண்ணங்களும் சுத்தமாக வேண்டும். நமது உடல் பிறருக்குச் சுயநலமின்றி சேவை செய்யும் உணர்வில் ஈடுபட வேண்டும்.
* நம்மிடம் இருக்கும் கர்வம், தற்பெருமை, பொறுமையின்மை, பேராசை, பதட்டம் முதலியவற்றை களைந்து எறிய வேண்டும். எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கடமை உணர்வுடன் செயல்படவேண்டும். தீயவற்றை வெறுத்து, நன்மை யாரிடமிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ராமாயணம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ராமர் இவற்றை கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். நாமும் அவற்றைப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் நற்குணங்களைப் பின்பற்றத் தொடங்கும் நாள் எதுவோ அதுவே நிஜமான ராமநவமி நன்னாளாகும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement