நல்லதையே பேசுங்கள்
டிசம்பர் 04,2012,
16:12  IST
எழுத்தின் அளவு:

* எவர் அதிகமாக வீண்பேச்சுக்கள் பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.
* உன் நாவைப் பேணிக்கொள்! நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்து!
* எனக்குப் பின் நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே!
* பேசுவது வெள்ளி என்றால் பேசாமல் மவுனம் கொள்வது தங்கமாகும்.
* கெட்ட வார்த்தைகள் பேசுபவன் மீது இறைவன் கோபம் அடைகின்றான்.
* ஒரு மனிதன் தன் நாவைக் காத்துக் கொண்டால் அல்லாஹ் அவனுடைய மானத்தைக் காத்துக் கொள்வான்.
* நாவை அடக்கியாளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அது இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது.
* மற்றவர் குறைகளை மறைப்பவர் குறைகளை இறைவன் மன்னித்து விடுகின்றான்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement