அறிவே வலிமை தரும்
டிசம்பர் 11,2012,
09:12  IST
எழுத்தின் அளவு:

* "நான்' என்ற உணர்ச்சி நீங்கும் போது, மனிதன் எல்லையற்ற தெய்வத்தோடு பொருந்தும் தகுதியைப் பெறுகிறான்.
* ஒன்றே பரம்பொருள். உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்கள்.
* நெஞ்சில் ஈரமில்லாவிட்டால் ஈசனைக் காண முடியாது. பகைவனுக்கும் நல்லதை நினைக்கும் அருள்நெஞ்சினராக இருக்க வேண்டும்.
* எங்கும் எப்போதும் அச்சமில்லாததும், உண்மையை அறிந்து கொள்வதுமான அறிவே நல்லறிவு. கடவுளிடம் நல்லறிவை வேண்டுவோம்.
* அறிவின் வலிமையே வலிமை. அறிவில் உயர்ந்தவர்கள் மற்றவர்களை இழிவாக நினைப்பது கூடாது.
* மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி நடந்தால் வாழ்வு நலம் பெறும். இல்லாவிட்டால் கெடுதி உண்டாகும்.
* ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.
* ஒன்றை அடக்கும் முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். நன்றாக அறியப்படாததை நம்மால் வசப்படுத்த முடியாது.
- பாரதியார்
( இன்று பாரதியார் பிறந்த தினம்)

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement