உண்மையான அழகு எது?
டிசம்பர் 11,2012,
16:12  IST
எழுத்தின் அளவு:

* வாய்மையும், அகிம்சையும் இமயமலை போல தொன்று தொட்டு இருக்கின்றன. இந்த இரண்டைத் தவிர நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யலாம்.
* அகிம்சை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும். வீரன், கோழை யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் பகையும், பயமும் உண்டு.
* அச்சமிருந்தால் உண்மையைப் பேச முடியாது. உண்மை தெரிந்தால் என்ன நேருமோ என்று பயப்படுபவன் உண்மையை மறைக்கவே செய்வான்.
* தன்னடக்கம் இல்லாதவன், எவ்வளவு கற்றவனாக இருந்தாலும் தற்குறிக்கு ஒப்பாகவே இருப்பான்.
* ஆற்றலுடன் அடக்கமும், மரியாதையும் ஒருவனிடம் சேர்ந்து விட்டால் அவனை யாராலும் வெல்ல முடியாது.
* உண்மையான அழகு என்பது ஆடை, ஆபரணங்களில் இல்லை. அக்கறையுடன் பணியாற்றுவது தான் அழகு.
* லட்சியவாதி தன்னுடைய குறைபாடுகளைப் பகிரங்கப்படுத்த வெட்கப்படக்கூடாது.
- காந்திஜி

Advertisement
மகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement