சரியான பாதையில் செல்!
டிசம்பர் 11,2012,
16:12  IST
எழுத்தின் அளவு:

* நம்மைச் சுற்றியுள்ளதை கண்களால் பார்க்கிறோம். உலகைப் பார்க்க மட்டுமல்ல. வல்லமை மிக்க இறைவனைக் காண்பதற்காகவே கண்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
* வேகமாகப் போவது மட்டும் முக்கியம் அல்ல. சரியான பாதையில் மனிதன் செல்ல வேண்டும். அப்போது தான் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போக முடியும்.
* அகங்காரமும், சுயநலமும் கொண்ட மனிதர்கள் கண்ணிருந்தும் பார்வையற்றவர்களாகவே வாழ்கிறார்கள்.
* நல்ல வழிகாட்டி மனசாட்சியே. அதுவே நமக்கு நல்ல எஜமானனாக இருக்கிறது.
* கடவுளை வழிபாடு செய்வதாக இருந்தால் மற்றவர்களின் நலனுக்காக மட்டும் இருக்கட்டும்.
* குழந்தைகளுக்கு அன்பு, பொறுமை, அமைதி போன்ற நல்ல குணங்களை கல்வி வழங்க வேண்டும்.
* கைமாறு கருதாமல் பிறருக்குச் செய்யும் உதவி, வாயில்லாத ஜீவன்களிடம் காட்டும் கருணை இவற்றால் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement