தொழில் நேர்த்தி வேண்டும்
டிசம்பர் 13,2012,
15:12  IST
எழுத்தின் அளவு:

* தர்மவழியில் கிடைக்கும் வெற்றியே நிலையானது. இதை உணராதவர்கள் உலக வரலாற்றையும் இயற்கை விதிகளையும் அறியாதவர்கள்.
* அநியாயம் அநியாயத்தை மட்டுமே வளர்க்கும். பாவத்தை புண்ணியத்தால் வெல்வதே அறிவுடைமை.
* மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும், நினைவில் தூய்மையும் இருப்பவர்களாக இருங்கள்.
* வல்லவனுக்கே வெற்றி கிடைக்கும். தொழிலில் நேர்த்தி இல்லாவிட்டால் தோல்வியைத் தவிர்க்க முடியாது.
* துணி வெளுக்க மண் இருக்கிறது. தோல் வெளுக்க சாம்பல் உண்டு. மனதை வெளுக்கத்தான் வழிஇல்லை.
* பரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதே வீடுபேறு. "வீடு' என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.
* எதை நீ ஆதரிக்கிறாயோ அது வளர்ச்சி பெறுகிறது. எதை விரும்புகிறாயோ அதுவே உன்னிடத்தில் தோன்றுகிறது.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement