அன்புக்கு கிடைக்கும் பரிசு
டிசம்பர் 13,2012,
15:12  IST
எழுத்தின் அளவு:

* தோட்டத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை வெட்டி சீர்படுத்தி அழகுபடுத்துவது போல, மனதையும் தியானப் பயிற்சியால் சீர்படுத்த வேண்டும்.
* கோபம் பல தீய விஷயங்களை மனதில் தூண்டிவிடும். பல ஆண்டுகளாக கிடைத்த ஆற்றலை கணநேரத்தில் இழக்கச்செய்து விடும்.
* மன பலவீனமே கோபமாக வெளிப்படுகிறது. அமைதி, பொறுமை, பணிவு போன்ற நற்குணங்களை மனதில் நிரப்பி விட்டால் பலவீனம் காணாமல் போய்விடும்.
* இறைவனை அறிய வேதம் பயிலத் தேவையில்லை. எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டினாலே, இறையருள் என்னும் பரிசு பெறலாம்.
* அடுத்தவரிடம் அன்பு காட்டாவிட்டால் உன்னையே நீ நேசிக்க முடியாது. அடுத்தவரைத் துன்புறுத்தும் மனிதன் தனக்குத் தானே துன்பம் இழைத்துக் கொள்கிறான்.
* பிறர் வற்புறுத்தலுக்காக இல்லாமல் மனதிலிருந்து தொண்டாற்றும் சிந்தனை தானாக வர வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement